திருச்சி அரியமங்கலம், உக்கடை புங்கள ஆயி அம்மன் கோவில் தெரு பகுதியில் வசித்து வருபவர்கள் திருநங்கைகளான தமிழ் மற்றும் நபியா. இருவரும் நேற்று இரவு மின்வெட்டு ஏற்பட்ட நிலையில் முன்புறக் கதவைத் திறந்து வைத்து விட்டு வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இன்று காலையில் தூங்கிஎழுந்து பார்த்தபோது மேஜையில் வைத்திருந்த தங்களின் 2 விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு செல்போன்கள் காணாமல் போன நிலையில், வீட்டினுள் மற்ற அறைகளை பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு பீரோவில் இருந்த 6 பவுன் தங்கநகை, 60ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.co/nepIqeLanO







Comments