கரூர் மாவட்டம் தோகைமலையில் இருந்து, அதவத்துார் வழியாக திருச்சிக்கு வரும் மாநில நெடுஞ்சாலையில், திருச்சி அதவத்துார் பிரிவு ரோட்டில் சோமரசம்பேட்டை காவல்நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக மோட்டார் வாகனத்தில் மூட்டைகளை ஏற்றி வந்த இருவரை சோதனையிட நிறுத்தினார்கள். அந்த மூட்டைகளில் 86 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது.
அதனை பறிமுதல் செய்த போலீசார், போதை பொருட்களை கடத்தி வந்த அல்லித்துறையை சேர்ந்த பிரபு, அதவத்துார் சக்தி நகரை வினோத்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.co/nepIqeLanO







Comments