திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள நரசிங்கபுரம் விநாயகர் தெருவில் வசித்து வந்த மனோகரன் என்பவர் தனக்கு சொந்தமான சுமார் 30க்கு 30 அளவுள்ள 60 அடி ஆழம் 50 அடி தண்ணீர் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது திடீர் என்று எதிர்பாராம விதமாக நீரில் மூழ்கி விட்டார்.
இதனை தொடர்ந்து துறையூர் தீயணைப்பு நிலையத்திற்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நிலைய அலுவலர் மனோகர் தலைமையில் மீட்பு குழுவினர் விரைந்து சென்று கினற்றில் பாதாள கொலுசு கொண்டு தேடி பார்த்ததில் அகப்படவில்லை.
மேலும் நீர்மூழ்கி மோட்டார் பம்புகள் கொண்டு நீர் இரைக்கப்பட்டு நீர்மட்டம் குறைந்தவுடன் பணியாளர்கள் மீண்டும் பாதாள கொலுசு கொண்டு தேடியதில் மனோகரன் இறந்த நிலையில் மீட்கபட்டார்.
உடலை உடர் கூறு ஆய்விற்காக துறையூர் அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.co/nepIqeLanO







Comments