திருச்சியில், கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தொழில் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறுவன் மாயமானதால், போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி, பாலக்கரை போலீசார், கூனிபஜார் அருகே, கோரி மேடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனை குற்ற வழக்கில் கைது செய்தனர்.
தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி, இ.பி., ரோட்டில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். அதன் பின், திருச்சி – கரூர் பைபாஸ் சாலையில் உள்ள சிறார் வரவேற்பு மையத்துக்கு, தொழில் பயிற்சி பெறுவதற்காக, சிறுவனை அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், நேற்று, பயிற்சி மையத்தில் இருந்து, அந்த சிறுவன் மாயமாகி விட்டதாக, அதன் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் மனோகரன் கொடுத்த புகார்படி, கோட்டை போலீசார் வழக்கு பதிந்து, சிறுவனை தேடி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.co/nepIqeLanO






Comments