திருச்சி மாவட்டம், பஞ்சப்பூரில் அமைந்துள்ள சாரநாதன் பொறியியல்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு முதலுதவி முறைகள் குறித்த பயிற்சி முகாமானது 15.05.2022 அன்று நடைபெற்றது. இப்பயிற்சி முகாமிற்கு சாரநாதன் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் K.கார்த்திகேயன் தலைமை வகித்தார்.
ஸ்ரீ சத்திய சாயி சேவா பேரிடர் மேலாண்மை அமைப்பின் பயிற்சியாளர் R.நாராயணசாமி மற்றும் நவீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சியளித்தனர். இப்பயிற்சி முகாயில் 10 மாணவிகள் உட்பட 37 நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்கள் பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் R.நாராயணசாமி பேசுகையில் சாலையில் ஏற்படும் பல விபத்துகளுக்கான முதன்மைக் காரணம் கவனக்குறைவு என்பதனையும், தலைக்கவசத்தின் இன்றியமையாமையை பற்றியும் விளக்கினார். எந்த நிலையில் இருப்பவர்களுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்பதனையும் பல வகையான காயங்கள் குறித்தும் சிறிய மற்றும் பெரிய காயங்களுக்கு பயன்படுத்தக் கூடிய மருந்துகளைப் பற்றியும் கூறினார்.
தலையில் அடிபட்டவர்களுக்கு போடப்படும் தலைக்கட்டு மற்றும் வாயிலிருந்து இரத்தம் வரும் பொழுது போடப்படும் தாடைக்கட்டு போன்றவைகளை பயன்படுத்தும் பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. காது மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் வரும் பொழுது அதனை நிறுத்த முயற்சி செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். குத்துக்காயம், கிழிப்புக்காயம் மற்றும் எலும்பு முறிவுக்கான அறிகுறிகள் அதற்கேற்ற கட்டு போடும் முறை குறித்து, விளக்கினார்.
மேலும் அவர் மின்சார அதிர்ச்சி மற்றும் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டர்களுக்கான முதலுதவி முறைகள் மற்றும் கை கால் வலிப்பு (காக்கா வலிப்பு) வருவதற்கான காரணங்கள் மற்றும் செய்ய வேண்டிய முதலுதவி முறைகளை விளக்கினார். விஷவாயு மற்றும் விஷம் குடித்து பாதிப்படைந்தவர்களுக்கான முதலுதவி முறைகள் குறித்து விளக்கினார். பாம்பு, மற்றும் நாய் கடித்தவர்களுக்கான முதலுதவி முறைகளைக் கூறினார். மாரடைப்பு பற்றியும் அதனை சரிசெய்யும் முதலுதவி முறையான சி.பி.ஆர் (CPR) குறித்தும் விளக்கினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments