திருச்சி மாவட்டத்தில் நீர்வளத் துறையின் சார்பில் அரியாறு மற்றும் ஆற்றுப் பாதுகாப்பு கோட்டங்களுக்குட்பட்ட மணிகண்டம் ஒன்றியம், புங்கனூரில் அரியாறு, கருமண்டபம் பகுதியில் கோரையாறு, வயலூர் சாலையில் உய்யக்கொண்டான் பாலம்
பாத்திமா நகர் பகுதியில் குடமுருட்டி, ஆறு, கம்பரசம்பேட்டை பகுதியில் கொடிங்கால் வடிகால் ஆகியவற்றில் தூர்வாரும் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில்.. திருச்சி மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் 18.75 மதிப்பில் தற்போது 70 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. குறுகலான பகுதிகள் அகலப்படுத்தப்பட்டு இன்னும் 10 தினங்களில் பணிகள் நிறைவுபெறும்.
தமிழகத்தில் சேரும் குப்பைகளை அந்த இடத்திலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மக்காத குப்பைகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்தியாவிலேயே சிறப்பான முறையில் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பதில் இந்தூர் சிறந்து விளங்குகிறது.
தற்போது நகர்ப்புறத்துறை செயலாளர் அதனை பார்வையிட இந்தூர் சென்றுள்ளார். இந்தூரை முன்மாதிரியாக கொண்டு குப்பைகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஆறுகளில் உரிய அளவீடுகளின்படி தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு, அனைத்துப் பணிகளையும், வருகின்ற மே 31ஆம் தேதிக்குள் முடித்திட அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments