திருச்சி மாவட்டம், துறையூர் தென்திருப்பதி என அழைக்கப்படும் துறையூர் பெருமாள்மலை பிரசன்ன வெங்கடாஜலபதி சுவாமிக்கு திருகல்யாணம் நிகழ்வு நடைபெற்றது.

இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்நிகழ்வு நடைபெறாமல் இருந்தது. இந்தாண்டு வைகாசி அவிட்ட நட்சத்திர நாளில் பிரசன்ன வெங்கடாஜலபதி, ஸ்ரீதேவி பூதேவி இருவருக்கும் மாங்கல்ய தானம் செய்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் துறையூர் பகுதியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO







Comments