Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வீரமலைப்பாளையத்திற்கு 8 நாட்கள் பொதுமக்கள் செல்ல தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், வருகின்ற 03.06.2022 
முதல் 10.06.2022 வரை உள்ள தினங்களில், காலை 7.30 மணி முதல் மாலை 
5.30 மணி வரை மற்றும் இரவு 07.00 மணி முதல் 10.00 மணி வரை The CICE, 
DEPOT BN MEG & CENRE, BANGALORE Unit பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் 
பயிற்சி நடைபெற உள்ளது.

அச்சமயம் மேற்கண்ட பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது 
எனவும், மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சி தளத்தில் எவரும் பிரவேசிக்கக் கூடாது 
என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *