புதுக்கோட்டையை சேர்ந்த சேதுமாதவன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்…. மதிமுக தொண்டர்கள் சிறு சலனத்துக்கு கூட இடமளிக்காமல் அமைதியாக உள்ளனர்.
இயக்கத்துக்கு சோதனை வரும்போது, எழுச்சி தானாக வந்துவிடும்.
உணர்வுகள், கொள்கைகள், லட்சியங்கள் அடிப்படையில் உருவான இயக்கம் என்பதால், அந்த உணர்வு மங்காமல் உறுதியாக உள்ளனர். ஆளுங்கட்சி மக்கள் செல்வாக்கோடும் பேராதரவோடும் இருப்பதால், தமிழகத்தில் எதிர்க்கட்சிகளே இருப்பது போல் தெரியவில்லை. திராவிட கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் சமரசம் செய்து கொள்வதில்லை, முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைவரும் உறுதியாக உள்ளனர்.
திமுகவின் ஓராண்டு ஆட்சியும், பாஜகவின் 8 ஆண்டு ஆட்சியும் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசமாக உள்ளது.
இதில் திமுக ஆட்சி மலை என்றால் பாஜக ஆட்சி மடுவாக உள்ளது. பாஜ தலைவர் அண்ணாமலையின் வேலை குற்றச்சாட்டு சொல்வது. அதை அவர் செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments