இந்து முன்னணி தலைவர் இராம.கோபாலன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல், திருச்சி உறையூர் சீராத்தோப்பில் உள்ள பாரத பண்பாட்டு பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அந்த இடத்தில் அவருக்கு கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி நினைவிடம் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று காரைக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன், மறைந்த இந்து முன்னணி தலைவர் இராம. கோபாலன் நினைவிடத்தை நேரில் பார்வையிட்டார்.
அப்போது அவர் இராமகோபாலன் புகைப்படத்தை பார்த்ததும் தேம்பி, தேம்பி அழுதார். உடனே அருகில் இருந்த இந்து முன்னணியினர் அவரை ஆசுவாசப்படுத்தி அழைத்து சென்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments