திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சேம்பவேலி பகுதியைச் சேர்ந்தவர் காந்தி (47). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டது.
இதனால் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருச்சி அரசு மருத்துவமனையில் வாரம் 3 முறை ரத்த மாற்று சிகிச்சை முறை செய்து வந்தார். இந்நிலையில் அவரது மனைவி சுமதி சிறுநீரகம் தானம் செய்ய முன்வந்தார். இதனையெடுத்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மூலம் காந்திக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.
திருச்சி அரசு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இது ஆறாவது முறையாக செய்யப்பட்டுள்ளது. தற்போது சிகிச்சை பெற்று கொண்ட கணவன் மனைவி நலமுடன் உள்ளனர். இந்த சிகிச்சை முறை அரசு மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments