திருச்சி வாளாடி அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் உத்தரவின்படி முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதி 
மொழியினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் 200க்கும் அதிகமான மாணவர்கள் இன்று ஏற்றுக்கொண்டனர்.
இந்த உறுதிமொழி நிகழ்ச்சியின்போது மாணவர்கள் மத்தியில் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி….. முதியவர்களிடம் நாம் எப்போதும் அன்பு பாராட்டுவதோடு இன்முகத்தோடு அவர்களிடம் பழக வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
மேலும் தமிழக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தக் கூடிய விஷயம் என்னவென்றால் மாணவச் செல்வங்கள் இந்த வயதில் படிப்பில் மட்டுமே அதிக நாட்டம் செலுத்த வேண்டும் என்பதே – நம் தாத்தா பாட்டி மட்டும் அல்ல கண்ணுக்குத் தெரிந்த வயதானவர்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் அதனை மகிழ்ச்சியோடு மாணவர்கள் செய்திட வேண்டும்.
ஆசிரியர்கள் உங்கள் மீது கண்டிப்பாக நடந்து கொண்டால் அது உங்களது நலனுக்காகத்தான் என்பதை மாணவர்கள் உணர வேண்டும் என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments