திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கல்லுப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை சாமி வீதி உலா நடைபெற்றது.
இதனால் நாட்டு வெடி வெடிக்கப்பட்டது. அப்போது ஒரு பகுதியில் கட்டப்பட்டு இருந்த நாட்டு வெடிகள் வெடித்து சிதறி பக்தர்களின் கூட்டத்தால் விழுந்தது. இதனால் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
மேலும் வெடிவிபத்தில் கள்ளிப்பட்டியை சேர்ந்த சத்யா(27), பாஸ்கர் (57), குமரப்பட்டியைச் சேர்ந்த பானுமதி (36), 13 வயது சிறுமி உட்பட 6 பேர் காயம் அடைந்தனர். உடனே காயம் அடைந்தவர்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் பற்றி அறிந்த மணப்பாறை போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO







Comments