திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தீவிர வாகன தணிக்கை செய்ய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
அதன்படி திருச்சி மாநகரத்தில் இன்று காவல் ஆணையர் உத்தரவின் பேரில் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் பள்ளி கல்லூரி அருகாமையிலும் பொது மக்கள் கூடும் இடத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கும் வகையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த 37 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்தும் வழக்கின் எதிரிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரில் இதுபோன்ற தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் விற்பனை செய்யும் கடைகள் உரிமத்தை ரத்து செய்யவும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இது போன்ற அதிரடி வேட்டை தொடரும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO







Comments