கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் புதிய இயக்குநர் மற்றும் செயலராக அருள்தந்தை லூயிஸ் பிரிட்டோ புதிதாக பணிப் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக திருச்சி மறைமாவட்டத்தின் முதன்மை குரு அருள்தந்தை ட .அந்துவான் அடிகளார் தலைமையில் பொறுப்பேற்கும் விழா நடைபெற்றது.
தற்போதைய செயலர் அருள்தந்தை S.G.சாமிநாதன் அடிகள் புதிதாக பொறுப்பேற்ற செயலர் அருள்பணி லூயிஸ் பிரிட்டோ அடிகளுக்கு பணி பொறுப்பேற்றதன் அடையாளமாக கோப்புகளை வழங்கி வாழ்த்தினார். தண்ணீர் அமைப்பின் சார்பில் செயல் தலைவர் கே.சி.நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஷ் குமார், நிர்வாகக் குழு ஆர்.கே.ராஜா ஆகியோர் துணிப்பைகள் வழங்கி வாழ்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் ப.நடராஜன் உள்ளிட்ட இருபால் ஆசிரியர்கள் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர். தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றத்தின் சார்பில் வளாகத்தில் புதிய செயலர் மரக்கன்று நட்டுவைத்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய….. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments