திருச்சிராப்பள்ளி மாவட்டம் வரகனேரி பகுதியில் உள்ள குளிர்பான நிறுவனத்தை உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு ஆய்வு செய்யப்பட்டது. அந்த நிறுவனம் மிகவும் சுகாதாரமற்ற முறையில் நடந்து வந்ததாலும், வேறு நிறுவனத்தின் பெயரில் உள்ள பாட்டில்களில் குளிர்பானங்கள் தயாரிக்கப்பட்டு வந்ததும் கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து 4790 குளிர்பான பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டு அந்த நிறுவனம் தற்காலிகமாக  சீல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில்… அனைத்து குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் குளிர்பான பாட்டில்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி அழியாத மையினால் அச்சிட வேண்டும் என்றும்,
சுத்தமான மற்றும் சுகாதாரமான முறையில் குளிர்பானங்களை தயாரித்து பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
பொதுமக்களும் இதுபோன்ற குளிர்பானங்களில் சந்தேகமோ, தயாரிப்பு தேதி இல்லாமல் கண்டறிந்தால் (99 44 95 95 95) (95 85 95 95 95) மற்றும் மாநில புகார் எண்  : 94 44 04 23 22 ஆகிய தொலைபேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.  
இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின், வசந்தன் மற்றும் மகாதேவன் உடனிருந்தனார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments