Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

பூண்டு வியாபாரி மற்றும் ஆட்டோ ஓட்டுநரை பாராட்டிய திருச்சி மாவட்ட எஸ்பி

திருச்சி மாவட்டம் துறையூர் டவுன் பெரியார் நகரில் வசிக்கும் சின்னையா மனைவி கிருஷ்னம்மாள் என்பவர் 08.06.22-ம் தேதி துறையூர் வட்டாட்சியர் அலுவலகததிற்கு வரும் போது துறையூர் பேருந்து நிலையம் அருகே தனது மணி பர்ஸ் தவற விட்டதாகவும், மேற்படி பர்சில் சுமார் 3 ½ பவுன் தங்க செயின் இருந்தாகவும் தெரிகிறது.

இந்நிலையில் காவல்நிலையம் அருகில் பூண்டு வியாபாரம் செய்யும் துறையூர் மாருதி நகர் மலைப்பன் சாலையை சேர்ந்த பரமசிவம் மகன் சுதாகர் என்பவர் அந்த வழியாக வரும் போது மணி பர்ஸ் கீழே கிடந்ததை எடுத்து பார்த்ததில் அதில் தங்க செயின், ஒரு ஏடிஎம் கார்டு இருந்துள்ளது.

உடனே அதை உரியவரிடம் ஒப்படைக்க 
வேண்டி சுதாகர் அந்த ஏடிஎம் கார்டை அருகில் உள்ள பேங்கில் காண்பித்து பிறகு அதன் மூலம் போன் நம்பர் வாங்கி அதை காவல்நிலையம் மூலம் கிருஷ்னம்மாளிடம் ஒப்படைத்துள்ளார். (மேலும் தகவலுக்கு காவல் ஆய்வாளர் செந்தில்குமார், துறையூர் – 94981-59328)

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் தெற்கு லட்சுமிபுரம் வசிக்கும் கோமாளா 
தேவி W/O வினோஸ் என்பவர் தனது மகனை 17.06.22-ம் தேதி மாலை 3.50 மணிக்கு பள்ளியிலிருந்து அழைத்து கொண்டு விராலிமலை ரோட்டில் நடந்து செல்லும் போது பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் வந்த குற்றவாளிகள் அவரது 5 பவுன் செயினை பறித்து கொண்டு சென்றனர்.

அப்போது, அங்கு ஆட்டோ ஒட்டி வந்த செல்லையா அதனை கண்டு உடனடியாக ஆட்டோவை குறுக்கே நிறுத்தியதில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு 
குற்றவாளிகள் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். உடனடியாக இருவர் தப்பிய நிலையில் மற்றொருவரை ஆட்டோ ஒட்டுநர் மடக்கி பிடித்து உள்ளார். (மேலும் தகவலுக்கு காவல் ஆய்வாளர் கருனாகரன், மணப்பாறை – 94981-86289)

மேற்கண்ட இருவரின் செயல்களை அறிந்த காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் குற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு அழைத்து அவர்களை பாராட்டி பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *