Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

ஓபிஎஸ் தனது சுயநலத்திற்காக சாதியை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறார் – திருச்சி முன்னாள் எம்.பி குற்றசாட்டு

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்….சுயநலத்திற்காக
சாதியை பயன்படுத்துகிறார் ஓ.பன்னீர்செல்வம்.”ஓபிஎஸ் தனது சுயநலத்திற்காக சாதியை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறார்”.

ஓபிஎஸ், தான் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயத்திற்கு எந்த காலத்திலும், ஒரு நன்மையும் செய்ததில்லை.தற்போது அதிமுகவில் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த 19 பேர் மாவட்ட செயலாளர்களாக உள்ளனர். அவர்களில், 2 பேர் தவிர மற்ற, 17 பேரும் எடப்பாடியின் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

 எடப்பாடி பழனிச்சாமி ஜாதி மதம் பாராமல் பணியாற்றுவார் என்று நாங்கள் அனைவரும் உறுதியாக நம்புகிறோம்.ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆகியோர் தொண்டர்களின் செல்வாக்கை இழந்து விட்டனர். மக்களின் ஆதரவும் அவர்களுக்கு இல்லை.ஒட்டுமொத்த
தொண்டர்களின் ஆதரவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் உள்ளது. 95 சதவீத தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் உள்ளனர்.

உதிரிகள் மட்டுமே ஓபிஎஸ் பக்கம் உள்ளனர். அவர்களும் விரைவில் உதிர்ந்து போவார்கள். ஓபிஎஸ்சும், அவரது மகனும் திமுகவுடன் நேரடியாகவே தொடர்பு வைத்துள்ளதுள்ளனர். அவர்கள் திமுகவை வெளிப்படையாக பாராட்டுவதை கண்டு தொண்டர்கள் கொந்தளித்து போய் உள்ளனர்.

வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். மீண்டும் தமிழகத்தில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்கும்.ஓபிஎஸ், தினகரன், சசிகலா சுற்றுப் பயணங்களால்  அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது” என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…

https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *