தேசிய வன மகோத்சவத்தை முன்னிட்டு ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக தமிழகம் முழுவதும் 37 மாவட்டங்களில் 146 விவசாயிகளுடைய நிலங்களில் மரங்கள் நடும் திருவிழா துவங்கியுள்ளது. இதில் விவசாயிகள் 2,10,000 (இரண்டு லட்சத்து பத்தாயிரம் மரங்களை நடவு செய்யவுள்ளனர்.

இந்தியா முழுவதும் சுற்றுக்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களிடம் மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரம் வன மகோத்சவம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஜூலை 1 ஆம் தேதி துவங்கப்பட்டுள்ளது.

சுற்றுக்சூழல் மேம்பாடு, மண்வள மேம்பாடு, நதிகளை மீட்டெடுத்தல் போன்ற நோக்கங்களுடன் விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக செயல்பட்டு வரும் காவேரி கூக்குரல் இயக்கம் விவசாயிகளுக்கு விலை மதிப்பு மிக்க டிம்பர் மரங்களை குறைந்த விலையில் 3 ரூபாய்க்கு வழங்கி வருகிறது. தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மஞ்சள் கடம்பு, ரோஸ்வுட் போன்ற மரங்கள் விவசாய நிலங்களில் நடப்படுகிறது.

வன மகோத்சவம் போன்ற சிறப்பு தினங்களில் மட்டுமல்லாது மண்ணுக்காக உழைத்த நம்மாழ்வார் ஐயா, நெல் ஜெயராமன் ஐயா, மரம் தங்கசாமி ஐயா போன்ற பெரியோர்களின் நினைவு நாள் மற்றும் பிறந்த நாள்களிலும் மிகப்பெரிய அளவில் மரம் நடும் பணியை காவேரி கூக்குரல் முன்னெடு்த்து வருகிறது. இந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் ஒரு கோடியே இருபது லட்சம் (1,20,00,000) மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாய நிலங்களில் நடப்பட உள்ளது.
காவேரி கூக்குரல் இயக்க களப்பணியாளர்கள் தமிழகம் முழுவதுமுள்ள விவசாயிகளின் நிலங்களுக்கு நேரடியாக சென்று மண்ணின் தன்மை, நீரின் தரம் போன்றவற்றை ஆய்வு செய்து மண்ணுக்கேற்ற டிம்பர் மரங்களை தேர்வு செய்து மரம் நடும் வழிமுறைகளை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

இந்த ஆண்டு வன மகோஸ்வத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல்சார்பாக
திருச்சி மாவட்டத்தில் உள்ள அபினிமங்கலம் , ஆனைக்கல்பட்டி, வேலாயுதபாளையம், வையம்பட்டி, மாத்தூர், ஒட்டம்பட்டிபுதூர், பொய்கைகுடி, முசிறி,வலையூர் ஆகிய இடங்களில் சுமார் 8000 ஆயிரம் மர கன்றுகளை விவசாயிகள் நடவு செய்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO






Comments