திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சி பொது மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து சாமானிய மக்கள் நல கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். துறையூர் பேருந்து நிலையம் முன்புறமுள்ள அண்ணாசிலை அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி வடக்கு மாவட்டசெயலாளர் க.குருநாதன் தலைமை வகித்தார்.
நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் தியாகராஜன், குளித்தலை ஒன்றிய பொறுப்பாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள். தொட்டியம் ஒன்றிய செயலாளர் மலர்மன்னன், காட்டுப்புத்தூர் நகர மகளிரணி செயலாளர் தமிழ்ச்செல்வி, மத்திய மண்டல ஒருங்கிணைப்பாளர் சபரிமுத்து, திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் தர்மலிங்கம், சுப்ரமணி, முருகதேவா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

துறையூர் நகராட்சியும், தமிழக அரசும் துறையூர் நகர மக்களுக்கு மாதம் இருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்கிறது. தினமும் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், காவேரி கூட்டுக்குடி நீர் திட்டத்தில் தரமற்ற பைப்புகளை பயன்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து காலி குடம் ஒன்றை முன்புறம் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பொது செயலாளர் ப.குணசேகரன் கண்டன உரை நிகழ்த்தினார். இறுதியாக, திருச்சி வடக்கு மாவட்ட பொருளாளர் தர்மலிங்கம் நன்றி கூறினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments