திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா தா.பேட்டை அருகே அமைந்துள்ள தேவனூர் புதூர் கரடு பகுதியில் வசித்து வருபவர் இளங்கோவன். இவர் ஆடுகள் வளர்த்துபிழைப்பு நடத்தி வருகிறார். இவரது வீடு அப்பகுதியில் உள்ள சிறு கரடு அடிவாரத்தில் அமைந்துள்ளது. வீட்டின் அருகிலேயே இவர் வளர்க்கும் ஆடுகளை பட்டி அமைத்து பாதுகாத்து வருகிறார்.
நேற்று நள்ளிரவு இவரது பட்டிக்குள் புகுந்த மர்ம விலங்கு 11 ஆடுகளை கடித்து குதறியது. இதில் 8 சினை ஆடுகள் இறந்து போனது. இதே போல் இவரது வீடு அருகே வசிக்கும் பெருமாள் என்பவரின் பட்டிக்குள் புகுந்த மர்ம விலங்கு ஆடுகளை கடித்துக் குதறியதில் 3ஆடுகள் பரிதாபமாக இறந்து போனது. மர்ம விலங்கு கடித்ததில் மொத்தம் 11 ஆடுகள் பலியானது. காயமடைந்த ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தார்.
இறந்து போன ஆடுகளின் மதிப்பு ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஆகும். இச்சம்பவம் குறித்து இளங்கோவன் மற்றும் பெருமாள் ஆகியோர் தா.பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். நள்ளிரவில் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்துக்கொன்ற மர்ம விலங்கு ஓநாயாக இருக்கலாம் என அப்பகுதி விவசாயிகள் சந்தேகிக்கின்றனர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO







Comments