நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை சிறப்பிக்கும் வகையில் மத்திய அரசு அரசு அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் அனைவரும் தேசியக்கொடி ஏற்று வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்காக 75 வது ஆண்டு சுதந்திர தின விழா சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவினை கொண்டாடும் வகையில் வருகிற 13-ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை வீடுகளில் தேசிய கொடி ஏற்றுவதற்காக லால்குடி மற்றும் துவாக்குடி நகராட்சிகளில் தேசியக்கொடி வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மணச்சநல்லூரில் மகளிர் சுதே உதவி குழு மூலம் தேசியக்கொடி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து மாவட்ட முழுவதும் அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தேசியக் கொடியை ஏற்றுவதற்கு தேசியக்கொடி வழங்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO







Comments