Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பெட்டவாய்த்தலையில் கொடிக்கம்பம் அகற்றப்பட்டதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியல்- 40 பேர் கைது

பெட்டவாய்த்தலை பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்ட எஸ் டி பி ஐ கட்சி கொடியை மாவட்ட நிர்வாகம்  அகற்றியதை கண்டித்து எஸ்டிபிஐ திருச்சி மாவட்ட தலைவர் முபாரக்அலி தலைமையில்சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது, 40 மேற்பட்டோர் கைது.

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை பேருந்து நிலையம் அருகில் எஸ் டி பி ஐ கட்சியினர் கடந்த 13ஆம் தேதி கட்சிக் கொடியை நட்டு வைத்துள்ளனர், இந்தக் கொடி அரசு அனுமதி பெறாமல் நட்டு வைத்ததால் இதனை அகற்றி நடவடிக்கை எடுக்க சிறுகமணி மேற்கு கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் பெட்டவாய்த்தலை  காவல் நிலையத்தில  புகார் மனு அளித்துள்ள நிலையில் பெட்டவாய்த்தலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர், தொடர்ந்து கொடிக்கம்பத்தை வருவாய்த்துறை மற்றும் காவல் துறை பாதுகாப்புடன் திருச்சி மாவட்ட நிர்வாகம் கம்பத்தை அகற்றியதை கண்டித்து மீண்டும் கொடி கம்பத்தை அதே இடத்தில் நட வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிரான முழக்கங்களை  எழுப்பி பெட்டவாய்த்தலை பேருந்து நிலையப் பகுதியில் சாலையில் படுத்தும், அமர்ந்தும் 40க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்களை ஜீயபுரம் டிஎஸ்பி தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து தனி மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர், சாலை மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *