திருச்சி குண்டூர் பகுதியை சேர்ந்தவர் கர்ணன் (30). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெரிய செட்டிபாளையம் புதூர் பகுதியை சேர்ந்த வினோத் கண்ணன் (32) என்பவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக போலி வெப்சைட்டில் தகவல் வெளியிட்டார்.
இதனிடையே வேலை கேட்டு விண்ணப்பித்த கர்ணனை தொடர்பு கொண்டு வெளிநாட்டுக்கு வேலை உள்ளதாகவும் அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் இதை நம்பிய கர்ணன் ரூபாய் 2 லட்சத்தை கண்ணன் வங்கி கணக்கில் அனுப்பி வைத்தார். பின்னர் அடுத்த நாள் வினோத் கண்ணனை தொடர்பு கொண்டார். அப்போது அவரை செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அதன் பின் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனையெடுத்து தான் ஏமாற்றப்பட்டது அறிந்த கர்ணன் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் அன்பு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் விசாரணையில் கண்ணன் அனுப்பிய இமெயில் முகவரி மூலம் கண்காணித்தனர். நேற்று வினோத் கண்ணன் அவரது வீட்டில் இருப்பதை தகவல் அறிந்து சைபர் கிரைம் போலீசார் ஈரோட்டிற்குச் சென்று வினோத் கண்ணனை கைது செய்தனர். மேலும் அவரது வங்கி கணக்கை சோதனை செய்தபோது அதில் 15 லட்சம் வரை இருப்பது தெரிய வந்தது.
மேலும் அவரிடம் பணம் செலுத்திய பலர் ஏமாந்திருக்கலாம் என கூறப்படுகிறது கைதான வினோத் கண்ணன் பிஎஸ்சி கேட்டரிங் முடித்துள்ளார் கம்ப்யூட்டர் நுணுக்கங்களை கற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments