திருச்சி மாநகரில் பிரதான சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை செயல்படுத்தவதாக கூறி மாநகராட்சி நிர்வாகம் சாலைகளை தோண்டி பணிகளை விரைந்து முடிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதால் நாள்தோறும் பொதுமக்கள், வாகனஓட்டிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்துவருகின்றனர்.
இதனிடையே ஆமைவேகத்தில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை மற்றும் சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துக்கள் ஏற்படுவதை சுட்டிக்காட்டி கை, கால்களில் காயமடைந்து கட்டுபோட்டுக் கொண்ட படியும்,
நாய்கள் மற்றும் பன்றிகள் தொல்லைகளை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கைகளில் நாய், மாடு மற்றும் பன்றிகள் புகைப்படங்களுடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகம் முன்பு நூதன முறையில் கண்டண ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் 70க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். இனியும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்படும்பட்சத்தில் அனைத்து மக்களையும் திரட்டி மாநகராட்சி முற்றுகைப்போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments