திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பு காவிரி நீர்வரத்து மற்றும் காவிரி கொள்ளிடத்தில் நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளது தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் மணிகண்டன் இன்று முக்கொம்பு மேலணையில் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முழு கண்காணிப்புடன் பணியாற்றியடவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இன்று நண்பர்கள் 12 மணி நிலவரப்படி காவிரியின் நீர்வரத்து வினாடிக்கு 1,46,000 கன அடியும் நீர் வெளியேற்றம், காவிரியில் 46 ஆயிரம் கன அடியும் கொள்ளிடத்தில் ஒரு லட்சம் கன அடியும் உள்ளது அலுவலர்களிடம் அரசு முதன்மை செயலாளர் கேட்டறிந்தார்.
தொடர்ந்து,நீர்வரத்து அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறப்பாக பணியாற்றிட அலுவலர்களுக்கு அரசு முதன்மை செயலாளர் உத்தரவிட்டார். முன்னதாக திருச்சிராப்பள்ளி கண்ட்ரோன்மென்ட் பகுதியில் உள்ள நீர்வளத்துறை அலுவலக வளாகத்தில் காவிரி நீர்வரத்து நீர் வெளியேற்றும் அதிகரித்துள்ளதை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மணல் சாக்கு மூட்டைகளை அரசு முதன்மை செயலாளர் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்.

ஸ்ரீரங்கம் மூலதொப்பு பகுதியில் உள்ள காவிரி கரையில் ஏற்கனவே கரை உடைப்பு ஏற்பட்டு சரி செய்யப்பட்ட கரை பகுதியினை நேரில் பார்வையிட்டு உடனடியாக தேவையான முன்னெச்சரிக்கைகளை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முழு கண்காணிப்புடன் பணியாற்றவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரகத்தில் காவிரியில் நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பொதுப்பணி துறை முதன்மை செயலாளர் ஆய்வு செய்தார்.
நீர்வரத்து அதிகம் காரணமாக கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்திடவும் தேவையான மணல் மூட்டைகள், சவுக்கு கம்புகள் ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அரசு முதன்மை செயலாளர் உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சி தலைவர் மா.பிரதீப்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, நீர்வளத்துறை செயற்பொறியாளர்௧ள் தமிழ்ச்செல்வன், நித்தியானந்தன், உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் முருகானந்தம் மற்றும் வருவாய் துறை நீர்வளத் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO






Comments