மேட்டூரில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்து காணப்படுவதால், திருச்சி முக்கொம்பு மேலணைக்கு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து ஏற்பட்டுள்ளது.
திருச்சி அம்மாமண்டபம் படித்துறை உள்ளிட்ட ஐந்து இடங்களில் இன்று மாநில பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர் இணைந்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சியினை நடத்தினர். இதனை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முன்னிலையில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியர் கூறுகையில்… வெள்ள காலங்களில் போது வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எவ்வாறு என்பது குறித்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இன்று ஒத்திகை நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெறுகிறது. ஒரு லட்சத்து 46 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது தற்போது திருச்சியில் அபாய கட்டம் ஏதுமில்லை. கடந்த முறை வெள்ளத்தில் 88 ஹெக்டேர் விவசாய நிலம் சேதமடைந்துள்ளது. ஆனால் தற்போது ஏதும் சேதம் அடையவில்லை என்றார்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில்….. சென்னை மழை வெள்ளப் பாதிப்புகளை தடுக்கும் வகையில் 937 கோடி மதிப்பீட்டில் பணி நடைபெற்று வருகிறது. வயர்கள் அதிகம் செல்வதால், மெட்ரோ வாட்டர் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுவதால் இதனைத் தாண்டி பணிகள் நடைபெறுகிறது. ஒப்பந்தக்காரர்களிடம் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், பணிகள் விரைந்து நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முழுக்க முழுக்க கவனத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் பாதுகாத்த வகையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி மாநகராட்சியில் இணைப்பு சாலைகள், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகள் நடைபெறுவதால் சாலை அமைக்கும் பணி தாமதம் ஏற்பட்டுள்ளது. பணிகள் முடிந்த இடங்களில் 576 சாலைகள் போட வேண்டிய இடத்தில் 276 சாலைகள் மட்டுமே போடப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநகராட்சி மேயர் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். அதேபோன்று பணிகளும் முடித்து விடப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments