திருச்சியில் பணி ஓய்வு பெற்ற கடைநிலை ஊழியருக்கு, தனது இருக்கையில் அமரச் செய்து அருகில் நின்று பாராட்டு தெரிவித்துள்ளார் ரயில்வே உயர் அலுவலர் ஒருவர்.
திருச்சி தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகத்தில், வணிகப் பிரிவு அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக (பதிவேடுகள் எழுத்தர்) பணிபுரிந்து, புதன்கிழமை மாலை பணிநிறைவு பெற்றார் நாகராஜன் என்ற பணியாளர். வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி.

அவரது பணி ஓய்வு பிரிவு உபசார நிகழ்வின்போது கௌரவிக்கும் விதமாக, அவரது அலுவலகத்தில், உயர் அலுவர்களில் ஒருவரன ( திருச்சி கோட்ட வணிக மேலாளர்) மோகனப்ரியா, நாகராஜனை தனது இருக்கையில் அமரச்செய்து, அவரது குடும்பத்தினருடன் அருகில் நின்று பாராட்டியுள்ளார். மனிதாபிமானம் அற்றுப்போய்விட்டது என எண்ணும் நிலையில், இப்படியும் சில அலுவலர்கள் இருக்கத்தான் செய்கின்றனர் என ரயில்வே ஊழியர்கள் அவரை பாராட்டியுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments