Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

காவலரின் உடலை தோளில் சுமந்து சென்ற டிஐஜி-நெகிழ்ச்சி நிகழ்வு

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பலையூர் மேடு கிழக்கு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மகன் ராமகிருஷ்ணன்.  தமிழக காவல்துறையில் 2017 ஆம் ஆண்டு கான்ஸ்டபிள் ஆக பணியில் சேர்ந்த ராமகிருஷ்ணன் திருச்சி மாவட்டம் வாத்தலை போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்தார்.

நேற்று முன்திடம் பெட்டவாய்த்தலையில் நடந்த விநாயகர்  விசர்ஜன ஊர்வலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராமகிருஷ்ணன் பணி முடிந்து அதிகாலை வீடு திரும்பினார்.

நேற்று காலை 10:30 மணியளவில் பணிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில்  புறப்பட்டார்.

அரசு உதவி பெறும் பள்ளி அருகே வந்தபோது மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டது தெரிய வந்தது.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் ராமகிருஷ்ணனின் உடன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது அவரது சொந்த கிராமத்தில் நடந்த இறுதி சடங்கில் திருச்சி சரக  டிஐஜிசரவண சுந்தர் பங்கேற்று ராமகிருஷ்ணர் உடலை சுடுகாடு வரை சுமந்து சென்று அஞ்சலி செலுத்தினார். இதில் திரளான போலீசார் பங்கேற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *