திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நகர்மன்ற தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று காலை  நடைபெற்றது. இதில் திமுக  கவுன்சிலர்கள்- 11 , மற்றும் அதிமுக கவுன்சிலர் – 11  சுயேட்சை கவுன்சிலர் –  5  
இருந்த நிலையில்  இன்று  நடைபெற்ற  மறைமுக தேர்தலில் திமுக சார்பில் 25 வார்டு உறுப்பினர் கீதா மைக்கேல் ராஜ் மற்றும் அதிமுக சார்பில் 27 வது வார்டு உறுப்பினர் ராமன்   ஆகிய இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர் .

அதனைத் தொடர்ந்து 27 வார்டு உறுப்பினர்களும் வாக்குகளை பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரி லால்குடி கோட்டாச்சியர் வைத்திய நாதன் , மற்றும் நகராட்சி ஆணையர் சியாமளா ஆகியோர் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட 25 வது வார்டு உறுப்பினர் கீதா மைக்கில் ராஜ் – 18 வாக்குகளும் அதிமுக உறுப்பினர் – 8 வாக்குகளும் பெற்றனர். இதில் ஒரு வாக்கு செல்லாதவை ஆகும்.

18 வாக்குகள் பெற்று கீதா மைக்கேல்ராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி லால்குடி RDO வைத்தியநாதன் கீதா மைக்கேல் ராஜ் இடம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து திமுக தொண்டர்கள் வெற்றி பெற்ற கீதா மைக்கேல்ராஜ் – க்கு வாழ்த்து தெரிவித்தனர். உடன் திமுக உறுப்பினர் Er.சீனிவாசன், மிலிட்டரி முருகன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments