திருச்சி மாவட்டம் லால்குடி கல்வி மாவட்ட குறுவட்ட அளவிலான எறிபந்து போட்டி செங்கரையூர் TELC உயர்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் லால்குடி கல்வி மாவட்டச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என 10 பள்ளிகளை சேர்ந்த 150 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் 13, 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் தலா 15 பேர் கொண்டகுழுவினர் போட்டியில் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பால்சாந்தகிரின் தலைமை தாங்கினார். தலைமை தலைமை ஆசிரியர் ஜேக்கப் கனகராஜ் வரவேற்புரை ஆற்றினார். செங்கரையூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஆதிகுடி ஊராட்சி மன்ற தலைவர் தங்க அறிவழகன், ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் முத்துச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் நிவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO







Comments