மின் கட்டண உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி மாநகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி குழு சார்பில் ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் அருகில் மின் கட்டண உயர்வை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் மாவட்ட குழு உறுப்பினர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் பகுதியில் சுற்றி தெரியும் மாடு குதிரைகளால் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் ஏற்படும் இடையூறுகளை தடுக்க கோரியும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கோருதல், மின்சார கட்டண உயர்வை ரத்து செய்ய கோருதல் , உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் CPI மாவட்ட செயலாளர் S.சிவா. AITUC மாவட்ட பொது செயலாளர் க.சுரேஷ், MC மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் க. இப்ராஹீம். CPIபகுதி செயலாளர் S. பார்வதி, தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர் A.அன்சர் தின் ஆகியோர் உரையாற்றினார்கள்.ஆர்ப்பாட்டத்தில் R.சரசு. R .ராஜா. டேவிட் பிரபாகரன். T.இப்ராஹீம். T.சரவணன் உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டார்கள். முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் கருணாகரன் நன்றி கூறினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments