தேசிய கல்லூரியின் தமிழ் துறைையில் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை சொற்பொழிவு இன்று நடைபெற்றது நிகழ்ச்சியின் தொடக்கமாக கல்லூரி முதல்வர் முனைவர் கே.குமார் தலைமை உரை வழங்கினார். கல்லூரி செயலர் ரகுநாதன் சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்து நிினைவு பரிசு வழங்கினார்.

சிறப்பு விருந்தினர் நாடாளுமன்ற நாயகர் திருச்சி சிவா “கல்கி என்னும் எழுத்தாளுமை” என்னும் பொருண்மையில் உரையாற்றுகையில் கல்கியின் வரலாற்று புதினங்களுக்கு இணையான முக்கியத்துவம் அவரது சிறுகதைகளிலும் இடம் பெற்றிருப்பது எடுத்துரைத்தார். குறிப்பாக 20-ம் நூற்றாண்டின் சமூக மாற்றங்களுக்கு உரிய முற்போக்கு கருத்துக்கள் அவர் படைப்புகளில் இடம்பெற்று இருப்பதை எடுத்துரைத்து நிறைவாக இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவது எவ்வளவு முக்கியமோ அதுபோல எதிர்காலத்திற்கு நல்ல மாணவர்களை உருவாக்குவதும் மிகவும் இன்றி அமையாது என்றார்.

முன்னதாக தமிழ் துறை தலைவர் முனைவர் ஈஸ்வரன் வரவேற்புரை நல்க இந்நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் உதவிப் பேராசிரியர் முனைவர் சா.நீலகண்டன் நிகழ்ச்சி தொகுப்பும் நன்றியுரை வழங்கினார்.
நிகழ்வில் திருச்சி நகைச்சுவை மன்றம் செயலாளர். கா சிவகுருநாதன் கல்லூரி துணை முதல்வர்கள், தேர்வு நெறியாளர், கலை மற்றும் அறிவியல் புல முதன்மையானவர்கள், பல்வேறு துறை தலைவர்கள்,பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பெருந்திரளாக பங்கேற்று பயன்பெற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments