Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் நாளை (28.09.2022) வெறிநோய் தடுப்பூசி முகாம்கள்

ஆண்டுதோறும் செப்டெம்பர் 28 ஆம் தேதி உலக வெறிநோய் தடுப்பு கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி திருச்சி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

பொதுமக்கள் தங்கள் செல்லப் பிராணிகளை அம்முகாம்களுக்கு அழைத்து சென்று வெறிநோய் தடுப்பூசிப் போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பிராணிகள் வாதைத் தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் நாய்களுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் திருச்சி சுப்பிரமணியபுரம் கால்நடை மருந்தகத்தில் நாளை (28.09.2022) நடைபெற உள்ளது காலை 8:30 மணி முதல் மாலை 12 மணி வரை நடைபெறும் இம்முகாமில் நாய்களுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி போடப்பட உள்ளது

வெறிநோய் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ள  இடங்கள் :

திருச்சி கோட்டம் : அசூர், அரியமங்கலம், பாப்பாக்குறிச்சி காட்டூர், குண்டூர், மேலகல்கண்டார்கோட்டை, கீழமுல்லக்குடி, வேங்கூர், வாழவந்தான்கோட்டை, அரசங்குடி, கே.சாத்தனூர், சுப்ரமணியபுரம், உறையூர்.

ஸ்ரீரங்கம் கோட்டம் : மட்டைப்பாரப்பட்டி, அதவத்தூர், நவலூர் குட்டப்பட்டு, யாகப்புடையான்பட்டி, ராம்ஜிநகர், சின்ன ஆலம்பட்டி, மேக்குடி, அந்தநல்லூர், எஸ்.புதுக்கோட்டை, பேரூர், கொடியாலம், பழுர், திருவரங்கம், உத்தமர்சீலி, போசம்பட்டிஇகருங்குளம், குளத்துராம்பட்டி, மருங்காபுரி, எஸ்.மேட்டுப்பட்டி, தேனூர், டி.பொருவாய், சிங்கிலிப்பட்டி, வி.இடையப்பட்டி, கவுண்டம்பட்டி, இடையப்பட்டி, பாலக்கருத்தம்பட்டி, கருஞ்சோலைப்பட்டி, பெரியகளப்பட்டி.

லால்குடி கோட்டம் : அன்பில், பூவாளுர், மகிழம்பாடி, செம்பரை, காட்டூர், வாளாடி, புதூர் உத்தமனூர், பச்சாம்பேட்டை, கீழரசூர், விராகலூர், பெருவளப்பூர், குமுளுர், காணக்கிளியநல்லூர், ஊட்டத்தூர், மால்வாய், மண்ணச்சநல்லூர், திருவெள்ளரை, கிளியநல்லூர், சிறுகனூர், எதுமலை, 94.கரியமாணிக்கம், எஸ்.கண்ணனூர், இருங்களுர், திருப்பைஞ்சலி, அய்யம்பாளையம்.

முசிறி கோட்டம் : முசிறி, புலிவலம், புத்தனாம்பட்டி, சின்னக்கொடுந்துறை, கரட்டாம்பட்டி, மூவானூர், அய்யம்பாளையம், பாலசமுத்திரம், காமலாபுரம், மூங்கில்பட்டி, சத்திரம், வேந்தம்பட்டி, முள்ளிப்பாடி, செவந்தாம்பட்டி, மோருபட்டி, பூலாஞ்சேரி, கோணப்பம்பட்டி, தொட்டியப்பட்டி, தும்பலம், கீரிப்பட்டி, எஸ்.பாளையம், சேனப்பநல்லூர், சின்னஇலுப்பூர், அம்மாப்பட்டி, மருவத்தூர், வைரிசெட்டிப்பாளையம், சிறுநாவலூர், நாகநல்லூர், மாராடி, லட்சுமணபுரம், ஆலத்துடையான்பட்டி ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறும் என்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *