தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என். நேரு அவர்களின் அறிவுரையின்படி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் “மக்களைத்தேடி மாநகராட்சி” குறை தீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் இறுதி புதன்கிழமையன்று நடைபெற உள்ளது.

“மக்களைத்தேடி மாநகராட்சி”குறை தீர்க்கும் முகாம் வருகின்ற 28.09.2022ம் தேதி அன்று மண்டலம் எண்:3 கைலாஷ் நகர், காட்டூர் சி.கே.சுமதி சந்தோஷ் மஹாலில் நடைபெற உள்ளது. இம்மண்டல அலுவலகத்திற்குட்பட்ட 13 வார்டு பகுதி பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக இக்குறைதீர்க்கும் முகாமில் அளித்து பயன்பெற்றுக்கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments