திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கரட்டாம்பட்டி கிராமத்தில் செந்தாமரைக்கண்ணன் கரட்டுமலை அருகே விவசாய நிலங்கள் உள்ள பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்ததன.
இச்சம்பவம் குறித்து கரட்டாம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் முத்துச்செல்வன் அளித்த புகாரின் பேரில் திருச்சி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மயில்களின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விவசாய நிலத்தில் விஷம் வைத்து மயில்கள் கொல்லப்பட்டதா வேறு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் 20க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து போன சம்பவம் கரட்டாம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments