திருச்சிராப்பள்ளி இலால்குடி வட்டார பகுதியில் உள்ள ஜின்னா மளிகை மற்றும் வெல்லம் மளிகை உணவு பாதுகாப்பு துறை ஆணையர் சு.லால்வேனா அவசர தடையாணை உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவால் அந்த கடைகள் சீல் செய்யப்பட்டது.
திருச்சிராப்பள்ளி ஜின்னா மளிகை கடையில் (07.07.2021) அன்று முதல் ஆய்வில் அந்த கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான் மசாலா குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது அறிந்து ரூ.5000/-விதிக்கப்பட்டது மற்றும் வெல்லம் மளிகை கடையில் (18.11.2021) அன்று முதல் ஆய்வில் மேலே குறிப்பிடப்பட்ட தமிழக அரசால் தடைசெயப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த காரணத்தினால் சட்ட உணவு மாதரிகள் மூன்று எடுத்து உணவு ஆய்வகத்திற்கு அனுப்பி வழக்கு தொடரப்பட்டது.
மேலும் இவர்கள் தொடர்ந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டு மீண்டும் அந்த கடையில் (01.10.2022) அன்று இரு கடைகளையும் ஆய்வின் போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு மீண்டும் ரூ.10,000/- அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அன்றைய தினத்தன்று அவசர தடையாணை அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக சென்னை உணவு பாதுகாப்பு ஆணையர் சு.லால்வேனா அவசர தடையாணை உத்தரவு வழங்கியதன் அடிப்படையில் அந்த வணிக கடைகள் (07.10.2022) அன்று இந்த இரு கடைகள் சீல் செய்யப்பட்டது.
மேலும், மாவட்ட நியமன அலுவலர் சு.ரமேஷ்பாபு கூறுகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செயது தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடை சீல் செய்யப்படும் என்று கூறினார். இந்த நிகழ்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதுபோன்ற பொதுமக்களும் உணவு சம்பந்தமான கலப்படங்களுக்கும் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட உணவு பொருட்களை தாங்கள் உணவு பொருள் வாங்கும் கடைகளில் கண்டறியப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.
உணவு கலப்பட புகாருக்கு – 99 44 95 95 95 / 95 85 95 95 95.
மாநில புகார் எண் – 94 44 04 23 22

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO






Comments