திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் பள்ளியில் தமிழ்நாடு அரசு கொண்டு வரவுள்ள மாநில கல்விக் கொள்கை எவ்வாறு அமைப்பது என்பது சம்பந்தமான கருத்து கேட்டு கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநகர் மாவட்டச் செயலாளர் க.இப்ராஹிம் மற்றும் மாநிலத் துணைச் செயலாளர் ஜி.ஆர். தினேஷ்குமார் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மேற்கு பகுதி செயலாளர் இரா.சுரேஷ் முத்துசாமி கல்விக் கொள்கை சம்பந்தமான கோரிக்கை மனுவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அளித்தார்.
மணிகண்டன் ஒன்றியத்திற்குட்பட்ட சோமரசம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஹோலி கிராஸ் பள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் எம் .ஆர். முருகன் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.முத்தழகு மற்றும் முத்துலட்சுமி, மாதர் சங்க பொறுப்பாளர்கள் எம். மருதாம்பாள், டி.நிர்மலா, கட்டிட சங்க பொறுப்பாளர் எம். ரஷ்யா பேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments