திருச்சி – கரூர் புறவழிச்சாலையில் 
திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் சாமி வீதியுலா வரும் நேரத்தில்  வேகமாக வந்த  லாரி தனக்கு முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானது. விபத்துக்குள்ளான லாரி மீது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதி சேதமடைந்தது. 
லாரி ஓட்டுநர் சக்திவேல் லாரி இடிபாடுகளில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்த நிலையில் காவல் துறை உதவியுடன் மீட்டு முதலுதவி செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்றவர்கள் யாருக்கும் காயம் ஏதுமில்லை. சாலையின் நடுவே லாரி சிக்கிக் கொண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி அப்புறப்படுத்தப்பட்டதால் போக்குவரத்து சீரடைந்தது.

ஐப்பசி மாத பிறப்பை ஒட்டி இன்று திருப்பராய்த்துறை கோவிலில் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற இருந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். அப்போது இவ்விபத்து ஏற்பட்டதால் அங்கு இருந்த பொதுமக்கள் அனைவரும் ஓடி வந்து லாரி ஓட்டுநரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments