பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் துலாம் மாதபிறப்பையொட்டி காவிரியிலிருந்து தங்ககுடத்தில் புனிதநீர் எடுத்துவரப்பட்டு நம்பெருமாளுக்கு திருமஞ்சனம்.

108-வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
ரெங்கநாதர் ஆலயத்தில் இன்று முதல் துலாம் மாதம் துவங்கிறது, இதனையொட்டி ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து தங்ககுடம் எடுத்துவந்து, அம்மா மண்டபம் புனித திருக்காவிரியிலிருந்து திருமஞ்சனம்(புனிதநீர்) கோவில் யானை ஆண்டாள் மீது ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு நம்பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் இருந்து கோவில் யானை ஆண்டாள் மீது தங்க குடத்தில் புனித நீர் எடுத்து செல்லும் காட்சியை வழிநெடுகிலும் பக்தர்கள் நின்று ரங்கா ரங்கா என பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்
சூரியன் ராசி மண்டலத்தில் துலாம் ராசியில் பிரவேசிப்பது துலாம் மாதம் எனபப்டுகிறது, ஐப்பசி மாதம் சூரியன் பிரவேசிக்கும் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த ஆண்டு துலாம் மாதம் பஞ்சாங்கப்படி இன்று துவங்கியதால் கோவில் யாணை ஆண்டாள் மீது தங்ககுடத்தில் நீர் எடுத்து வந்து ஐப்பசி மாதம் முழுவதும் ஸ்ரீரங்கநாதருக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.

புனிதமான காவிரியில் நீராடினால் பாவங்கள் தீரும் மற்றும் நமக்கும் நமது குடும்பத்தில் நன்மைகள் வந்து சேரும் என்பது ஐதீகம், ஆனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்கள் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அம்மா மண்டபத்தில் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments