மக்கள் மேம்பாட்டு வினையகம் பணிபுரியும் பகுதிகளில் உள்ள எச்ஐவி உடன் வாழும் குழந்தைகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தமர் கோயில் பி எல் ஏ திருமண மண்டபத்தில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட இணை இயக்குனர் மருத்துவர் லட்சுமி தலைமையிலும் மருத்துவர் மணிவண்ணன் மாவட்ட திட்ட மேலாளர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு முன்னிலையில் அனைவருக்கும் புத்தாடை இனிப்பு சத்தான உணவுப் பொருட்கள் போன்றவற்றை வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகள் அனைவரும் கல்வி கற்க உள்ள மத்திய மாநில அரசு திட்டங்கள் பற்றியும் உடல் நலம் பற்றியும் சத்தான உணவு முறைகள் மாவட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் அரசு இலவச மருத்துவ திட்டங்கள் பற்றி அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியை இயக்குனர் முனைவர் அம்பலவாணன் திட்ட விளக்க உரையாற்றினார் திட்ட மேலாளர் முத்துக்குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO






Comments