முருகப்பெருமானுக்கு உகந்ததாகக் கருதப்படும் விரதங்களில் முக்கியமானதான கந்தசஷ்டி விரதம் ஐப்பசிமாதம் அமாவாசையன்று முதல் 7 நாட்கள் கடைபிடிக்கப்படும். திருப்புகழை உலகிற்கு அளித்த அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருள்பாலித்த திருத்தலமான திருச்சி வயலூர் முருகன் கோவில் மிகவும் பிரசித்திபெற்றதாகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா வெகு வெகுமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி கந்தசஷ்டி விழா இன்று காலை 9 மணி அளவில் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இன்று தொடங்கி வருகிற 31ம் தேதி வரை நடைபெறும் விழாவின் இன்றைய தினம் முத்துக்குமாரசாமி வள்ளி, தெய்வானை சமேதராக சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க, முத்துக்குமாரசுவாமிக்கு லட்சார்ச்சனையும், தீபாராதனையும் நடைபெற்றது.
சூரிய கிரகணத்தை ஒட்டி கோவில் நடை ஒரு மணிக்கு சாத்தப்படுவதாலும், ஆறுபடை வீடுகளுக்கு செல்ல முடியாத பக்தர்கள் விரதம் இருந்து காப்புகட்டி, மூலவர் சுப்பிரமணிய சுவாமி மற்றும் உற்சவரை வழிபாடு செய்து வருகின்றனர். அதேநேரம் வயலூர் முருகன் ஆலயம் பக்தர்கள் கூட்டத்தால் அலைமோதியது.
நாளைய (26.10.2022) தினம் உற்சவர் வெள்ளி மயில் வாகனத்திலும் அதனைத் தொடர்ந்து தினசரி பல்வேறு அலங்காரத்திலும் எழுந்தருளி வீதி உலா வரும் வைபவம் நடைபெறும். வருகிற 30.10.2022 ம் தேதி அன்று காலை வேல் வாங்கும் நிகழ்ச்சியும் இரவு சூரசம்ஹார வைபவமும் நடைபெற உள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….. https://t.co/nepIqeLanO







Comments