திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த செவந்தாம்பட்டி என்ற இடத்தில் ( திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில்) மூன்று கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
ராஜபாளையத்தில் இருந்து திருச்சிக்கு  ஒரு சொகுசு கார் சென்று கொண்டிருந்தது
 இந்த காரை கந்தசாமி என்பவர் ஒட்டி சென்று கொண்டிருந்த போது திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த செவந்தாம்பட்டி  மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே வரும் போது காரின் முன்பக்க டயர் வெடித்து.இதில் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனை தாண்டி எதிர்த்திசையில் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு இனோவா கார் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. சாலை விபத்தில் உயிரிழந்த 4 பெண்களில் பத்மா(61)திருச்சி தனியார் கல்லூரி தாளாளர் (UDC  உருமு தனலட்சுமி கல்லூரி) பூஜா ஸ்ரீ(20)  திருச்சி (எஸ்.ஆர்.சி தனியார் கல்லூரி)மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.இதில் இனோவா சொகுசு காரில் பயணம் செய்த பத்மா  என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக பலியானார்.
இதில் ராஜபாளையத்தில் இருந்து திருச்சி சென்ற காரில் பயணம் செய்த மங்கையர்கரசி, பூஜா ஸ்ரீ , ரஞ்சனா ஆகியோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். உடனே அருகில் இருந்தவர்கள் காயம்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் காயமடைந்தனர் 4 பேரை மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் . மேலும் சம்பவ இடத்திற்க்கு மணப்பாறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமநாதன் மற்றும் மணப்பாறை காவல் ஆய்வாளர் ஆய்வு செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           125
125                           
 
 
 
 
 
 
 
 

 27 October, 2022
 27 October, 2022





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments