திருச்சி மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமையில் நடந்த கூட்டத்தில் துணை மேயர் திவ்யா, 5 மண்டல தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் 41 ஆவது வார்டு திமுக கவுன்சிலரும், நகரமைப்புக்குழு தலைவருமான கொட்டப்பட்டு தர்மராஜ் பேசுகையில்,
கட்சி கூட்டத்தில் எனது வார்டுக்கு உட்பட்ட பொன்மலைப் பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. இதில் நமக்கு சொந்தமான இடத்தை அளந்து ஆக்கிரமிப்பினை அகற்ற வேண்டும் என பேசும்போது, தாங்கள் (மேயர்) டேப் எடுத்துக்கொண்டு அளந்து பார்த்து சொல்லுங்கள் எனக் கூறினீர்கள் .இது நக்கலான பதிலாக நான் பார்க்கிறேன் என கோபமாக கூறினார். அதற்கு மேயர் நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை. கட்சி கூட்டத்தில் பேசியதை மன்றத்தில் பேசுவதும், மன்றத்தில் பேசுவதை கட்சிக் கூட்டத்தில் பேசுவதும் தவறான நடைமுறை என்றார்.

இதைத் தொடர்ந்து திமுக கவுன்சிலர் கொட்டப்பட்டு தர்மராஜ் கூட்டத்திலிருந்து வழி நடப்பு செய்தார். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு அரசு கிராம சபை போல நகர சபை உருவாக்குவதற்கு திட்டமிட்டு வருகிற(01.11.2022) ஒன்றாம் தேதி முதல்வர் தாம்பரத்தில் நகர சபையை துவக்கி வைக்கிறார். திருச்சி மாநகராட்சியில் உள்ள திமுக மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சியினரும் நகர சபை கொண்டு வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதற்கு கையெழுத்து போட்டு அனைத்து உறுப்பினர்களும் அடுத்த மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர். தமிழக அரசுக்கு எதிராக ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சி சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களே தீர்மானம் நிறைவேற்ற முடிவு எடுத்திருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments