திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 33வது வார்டு செங்குளம் காலனி அடுக்குமாடி குடியிருப்பில் தூய்மைப் பணியாளர்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் குடிநீர் பிரச்சனை தொடர்ந்து உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், திருச்சி மாநகரை தூய்மையை செய்யும் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் பகுதி என்பதால் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாகவும், மழை நீர் தேக்கம்,
பாதாள சாக்கடை பிரச்சனை மற்றும் தெருவிளக்கு அமைத்து தரக்கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இன்று 16.11.2022 செங்குளம் காலனி மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அப்பகுதி மக்களோடு திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அதில் அரியமங்கலக் கோட்ட உதவி ஆணையர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மாநகராட்சி நிர்வாகம் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். மேலும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் விரைவில் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO







Comments