மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தனி நபர் கல்வித்திட்டம் (IEP) மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, அவரவர் நிலைக்கேற்ற இலக்கை வடிவமைத்து அவர்களுக்கு முன்னேற்றத்தினையும் பங்கேற்பினையும் உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எந்த குழந்தைக்கும் கல்வி விடுபடக்கூடாது என்பதை உறுதி செய்ய மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்த்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை மேற்கொள்ள தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இணைவோம் மகிழ்வோம் நிகழ்வானது. பள்ளி மாணவர்கள் சக மாணவர்களுடன் குறிப்பாக மாற்றுத்திறனாளி மாணவர்களுடான நட்பை வலுப்படுத்தும் விதமாக அமையவும், வகுப்பறைகளில் பெரிய தாள்களை ஒட்டி அதில் மாணவர்கள் தாங்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களை பற்றிய நேர்மறையான எண்ணங்களை எழுதியும், மாற்றுத்திறனாளி மாணவர்களும் அது போல  எழுதியும் செய்தனர். இதன் வழியாக மாணவர்களுடான நட்பு வளரும். மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களிடையே தன்னம்பிக்கை உயர வழிவகை செய்கிறது.
மேலும் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் நலனுக்காகவும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று (17.11.2022 ) வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பி தென்னூர், சுப்பையா நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பேரணி சென்றனர்.
கல்வி அனைத்து குழந்தைகளுக்குமான உரிமை என்பதாலும், அக்கல்வியினை அனைத்து குழந்தைகளுக்கும் சமமாக கிடைக்கப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் நலனுக்காகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மருத்துவர்கள் முன்னிலையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். 
இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தன், சிறப்பு விருந்தினர்களாக வேலன் சிறப்பு மருத்துவமனையின் இயக்குநரும், மருத்துவமான ராஜவேல், பொது மற்றும் லேபராஸ்கோபிக் அறுவை சிசிச்சை நிபுணர் மருத்துவர் கார்த்திக் வையாபுரி, எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர், வைசாலி மருத்துவமனை கண் மருத்துவர்கள் வைஷ்ணவி, சுகன்யா, அவசர கால மருத்துவ நிபுணர் தேம்பாவணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  மேலும் நிகழ்வில் திருச்சி ரவுண்ட் டேபிள் 54 மற்றும் திருச்சி லேடீஸ் சர்க்கிள் எண்.33 அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments