அகில இந்திய அமைச்சூர் கபடி கழகம் சார்பில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கான தேசிய அளவில் 32 வது தேசிய சப் ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலத்தில் அடுத்த மாதம் 27ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தமிழக அணியில் பங்கேற்கும் திருச்சி மாவட்ட கபடி அணிக்கான சிறுவர் சிறுமியர் தேர்வு நாளை (19.11.2022) காலை 8 மணிக்கு திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் சிறுவர் சிறுமியர் தமிழக அணி சார்பில் கலந்து கொள்வார்கள், தேர்வில் பங்கேற்கும் சிறுவர் சிறுமியர் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு பிறகு பிறந்திருக்க வேண்டும். 55 கிலோ எடை உள்ளவராக திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
தேர்வுக்கு வரும்பொழுது வயது சான்றிதழ் தேதி வருடத்தத்துடன் கூடிய ஆதார் அட்டை வாக்காளர் அட்டை, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் கூடிய அசல் மற்றும் நகல் கொண்டுவர வேண்டும். நாளை காலை 10 மணிக்குள் வராத வீரர்கள் தேர்வில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என்று திருச்சி மாவட்ட அமைச்சூர் கபடி கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments