திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சையை ஊக்குவிக்கும் வகையில் நவம்பர் 21 முதல் டிசம்பர் 04 வரை வாசக்டமி இருவார விழா – 2022 கடைபிடிக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்களால் இக்கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இச்சிகிச்சையானது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை (E.S.I) மற்றும் மேற்படுத்தப்பட்ட அரசு வட்டார சுகாதார நிலையங்களிலும் நடைபெற உள்ளது. நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறையை ஏற்றுக்கொள்ளும் ஆண்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1100-ம், ஊக்குவிப்பாளர்களுக்கு ரூ.200–ம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
இச்சிகிச்சையானது ஒரிரு நிமிடங்களில் மயக்க மருந்து கொடுக்கப்படாமல் குடும்பநல கருத்தடை சிகிச்சை செய்யப்படும். சிகிச்சைக்கு பின்பு மருத்துவமனையில் தங்கவேண்டிய அவசியமில்லை. சிகிச்சை முடிந்த பிறகு வீட்டிற்க்கு செல்லலாம். கத்தியின்றி. ரத்தசேதமின்றி, செய்யப்படும் இக்கருத்தடை சிகிச்சையால் பின் விளைவுகள் ஏதும் இருக்காது. எனவே, விருப்பமுள்ள ஆண்கள் நவீன குடும்பநல கருத்தடை செய்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தொடர்புக்கு : குடும்பநல அலுவலகம் தொலைப் பேசி எண் : 0431-2460695, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் – 94432 46269 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலம் துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM#
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments