திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் முருங்கை கிராம ஊராட்சி மன்ற தலைவர் புனிதா விஜயசேகர். இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்ற காரணத்தால் அந்த ஊராட்சியின் துணைத் தலைவர் கருப்பையா எவ்வித ஒத்துழைப்பும் கொடுப்பதில்லை எனவும், துணைத்தலைவரின் உடன் இருப்பவர்கள் ஏழு பேர் சாதி வித்தியாசம் பார்த்து உயர்வு தாழ்வு பேசிக்கொண்டு தன்னை பதவியில் இருந்து விரட்டி விடுவதாக மிரட்டுவதாகவும்,
இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை எனவும், இதனால் 16 சிற்றூர்களை கொண்ட ஊராட்சியில் 10 கிராமங்களில் குடிநீர் விநியோகம் நநடைபெற்றுள்ளது. ஊர்களில் மின் பிரச்சினை காரணமாக விளக்குகள் அணைந்து இருளில் மூழ்கி உள்ளது.
இந்த பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக புனித விஜய் சேகர் தலைமையில் அக்கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் போராட்டம் நடத்தினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments