பெரம்பலூர் குன்னம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (38), த.பெ. சின்னசாமி என்பவர் இன்று (26.11.22)-ந்தேதி திருச்சி மாநகரம் உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணப்பா ஹோட்டல் அருகில் வெளிநாடு செல்வதற்காக ஏஜன்ட் அலுவலகத்திற்கு வந்தபோது கடையின் அருகே சாலை ஓரத்தில் கிடந்த சுமார் 5 பவுன் தங்க சங்கிலியை கண்டு எடுத்துள்ளார். அதன்பின்னர் திருச்சி மாநகரம் உறையூர் காவல்நிலையத்தில் தங்க சங்கிலியை ஒப்படைத்துள்ளார்.

இதனை அறிந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், சுரேஷ்குமார் தனது ஏழ்மையான சூழ்நிலையிலும் அடுத்தவரின் நகைக்கு ஆசைப்படாமலும், நேர்மை தவறாமல் சாலையில் கீழே கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை காவல்நிலையத்தில் ஒப்படைத்தற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவரை நேரில் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO






Comments